February 23, 2022 தண்டோரா குழு
கோவை மாநகராட்சியில் 8 வார்டுகளில் அதிமுக வேட்பாளர்கள் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டனர்.
கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளரை திமுக கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், 3 இடங்களில் அதிமுக வேட்பாளரை சுயேட்சை வேட்பாளர் முந்தியுள்ளார். 8 வார்டுகளில் அதிமுக 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
கோவை மாநகராட்சி 2வது வார்டில் திமுக வேட்பாளர் புஷ்பமணி 5125 வாக்குகளும், பாஜ வேட்பாளர் வத்சலா 2362 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் மணி 897 வாக்குகளும் பெற்றுள்ளனர். 10வது வார்டில் திமுக வேட்பாளர் கதிர்வேல் 2907 வாக்குகள், சுயேட்சை வேட்பாளர் மருதாசலம் 1930 வாக்குகள், அதிமுக வேட்பாளர் ரவிக்குமார் 839 வாக்குகள் பெற்று 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
14வது வார்டு மதிமுக சித்ரா 1678 வாக்குகள், பாஜ வேட்பாளர் இந்துமதி 737, அதிமுக வேட்பாளர் சங்கீதா பிரகாஷ் 724 வாக்குகள் பெற்று 3 இடம் பிடித்தார்.இதேபோல், 17வது வார்டில் திமுக வேட்பாளர் சுபஸ்ரீ 4899 வாக்குகள், பாஜ வேட்பாளர் மகேந்திரகுமார் 1386 வாக்குகள் பெற்றனர். 3வது இடத்தில் அதிமுக வேட்பாளர் அம்பிகா 614 வாக்குகள் பெற்றார்.
44வதுவார்டில் சிபிஐ வேட்பாளர் மல்லிகா 2377, சுயேட்சை வேட்பாளர் வேலுமணி 2052 வாக்குகள் மற்றும் அதிமுக வேட்பாளர் உமாதேவி 1527 வாக்குகள் பெற்று 3வது இடம் பிடித்தார். 54வது வார்டில் திமுக வேட்பாளர் பாக்கியம் 4361 வாக்குகள், சுயேட்சை வேட்பாளர் விமலா ராஜேந்திரன் 2589 வாக்குகளும் பெற்றனர். 3வது இடத்தில் அதிமுக வேட்பாளர் பானுமதி 1500 வாக்குகள் பெற்றார். 95வது வார்டில் திமுக வேட்பாளர் அப்துல் காதர் 6537 வாக்குகளும், எஸ்டிபிஐ வேட்பாளர் முகமது சலீம் 901 வாக்குகள் பெற்றார். 755 வாக்குகள் பெற்ற அதிமுக வேட்பாளர் ஹீலர் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.