• Download mobile app
28 Nov 2024, ThursdayEdition - 3214
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

போஷ் நிறுவனம் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக 25,000 மரக்கன்றுகள் நடும் திட்டம்

February 24, 2022 தண்டோரா குழு

ராபர்ட் போஷ் என்ஜினியரிங் அண்ட் பிசினஸ் சொல்யூஷன்ஸ் என்று முன்பு அழைக்கப்பட்டு வந்த போஷ் குளோபல் சாஃப்ட்வேர் டெக்னாலஜிஸ் அதன் 25 ஆண்டுகால மரபைக் கொண்டாடும் வகையிலும் வலுவான 25,000 ஊழியர்கள் கொண்ட குழு செயல்படுவதை பிரதிபலிக்கும் வகையிலும் 25,000 மரக்கன்றுகள் நடுவதற்கு முடிவு செய்துள்ளது.

சிறியளவிலான இந்த காடு வளர்ப்பு முயற்சிக்காக “பாரஸ்ட்ஸ் பை ஹார்ட்ஃபுல்னெஸ்” அமைப்புடன் கைகோர்த்துள்ளது. கோயமுத்தூர், பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் மேற்கொள்ளப்பட இருக்கும் இந்த மரக்கன்றுகள் நடும் முயற்சி இன்று 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ம் தேதி தொடங்கி உள்ளது.

போஷ் குளோபல் சாஃப்ட்வேர் டெக்னாலஜிஸ் மொபிலிட்டி என்ஜினியர் மற்றும் மெம்பர் ஆஃப் எக்சிக்யூடிவ் லீடர்ஷிப் – எஸ்விபி (SVP), திரு ஆர்கே ஷெனாய் இந்த முயற்சி குறித்து கூறும்போது, “மரக்கன்றுகள் நடும் இந்த முயற்சி சுற்றுச்சூழலுக்கு உகந்த செயல்பாடுகளுக்கு நாங்கள் அளிக்கும் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் போஷ் குளோபல் சாஃப்ட்வேர் டெக்னாலஜிஸ் கவனம் செலுத்துகிறது. அதற்கேற்ப புத்திசாலித்தனமாகவும் இணைப்பை ஏற்படுத்தும் வகையிலும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் உள்ள தயாரிப்புகளையும் உயர்தர தொழில்நுட்பத் தீர்வுகளையும் வழங்குகிறோம்.

இந்தியாவில் நாங்கள் 25 ஆண்டு காலமாக செயல்பட்டு வருவதைக் கொண்டாடும் வகையிலும் சமீபத்தில் போஷ் குளோபல் சாஃப்ட்வேர் டெக்னாலஜிஸ் என்கிற பெயரில் ரீபிராண்ட் செய்யப்பட்டதையும் இந்த முயற்சியின் மூலம் கொண்டாட இருக்கிறோம். இந்த முயற்சியானது வரும் ஆண்டுகளிலும் நிலையான, நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. உலகளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பைப் பேணும் வகையில் போஷ் நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இது கார்பன் நடுநிலையை ஊக்குவிக்கும் முதல் முயற்சி. ஏரிகள் புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை போஷ் குளோபல் சாஃப்ட்வேர் டெக்னாலஜிஸ் மேற்கொண்டு வருகிறது. கிரகத்தின் சூழலியல் சமநிலையை பாதுகாப்பதிலும் நிர்வகிப்பதிலும் இது மற்றுமொரு சிறிய முன்னெடுப்பு. உள்ளூர் மக்களுடன் இணைந்து நம்மால் பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடவும் அடுத்த தலைமுறைக்காக ஆரோக்கியமான சுற்றுச்சூழலை உருவாக்கவும் முடியும்,” என்றார்.

ஹார்ஃபுல்னெஸ் பிரெசிடெண்ட் மற்றும் வழிகாட்டி கமலேஷ் படேல் கூறும்போது,

“விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் வருங்கால தலைமுறையினருக்காக பசுமைப் போர்வையை அதிகரிக்கவும் நாங்கள் ஹஃபாரஸ்ட்ஸ் பை ஹார்ட்ஃபுல்னெஸ்’ முயற்சியை மேற்கொண்டிருக்கிறோம். இயற்கையான சுற்றுச்சூழலை மீட்டெடுப்பதற்கு ஏராளமான தாவரங்கள் மீண்டும் புத்துயிர் பெறவேண்டும். இந்த அளவை எட்டுவது என்பது ஒரே நாளில் ஒரே ஒரு நிறுவனத்தின் முயற்சியால் சாத்தியமாகாது. கார்ப்பரேட்கள், அரசாங்கங்கள், என்ஜிஓ-க்கள், வனவியல், தனிநபர்கள் என அனைத்து பங்குதாரர்களும் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்ளவேண்டும். இந்த பசுமை முயற்சியில் இணைந்துகொள்ள பல கார்ப்பரேட்கள் ஆர்வம் காட்டுவது மகிழ்ச்சியளிக்கிறது.

போஷ் குளோபல் சாஃப்ட்வேர் டெக்னாலஜிஸ் இந்தியாவில் அதன் 25 ஆண்டு கால செயல்பாடுகளை கொண்டாடும் வகையிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அர்ப்பணிப்புடன் செயல்படுவதை கொண்டாடும் வகையிலும் பல்வேறு நகரங்களில் பெரியளவில் இந்த மரக்கன்றுகள் நடும் முயற்சியை மேற்கொண்டிருப்பதற்காக போஷ் குளோபல் சாஃப்ட்வேர் டெக்னாலஜிஸ் நிறுவனத்திற்கு எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்,” எனக்கூறினார்.

பெங்களூரு, ஹைதராபாத், கோயமுத்தூர் ஆகிய நகரங்கள் முழுவதும் 25,000 மரக்கன்றுகள் நடும் இத்திட்டம் பல்லுயர் பாதுகாப்பை மேம்படுத்துவதிலும் மாசுபாட்டைக் குறைக்கும் வகையில் குறிப்பிட்ட இடத்தில் பருவநிலையை மாற்றத்தை ஏற்படுத்துவதிலும் உள்ளூர் மக்களுக்கு இயற்கையான பழங்களையும் மருத்துவ குணம் கொண்ட மூலிகைகளையும் வழங்குவதிலும் உள்ளூர் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதிலும் அடுத்த பத்தாண்டுகளில் குறைந்தபட்சம் 5,000 டன் கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதிலும் கவனம் செலுத்துகிறது. போஷ் குளோபல் சாஃப்ட்வேர் டெக்னாலஜிஸ் அதன் என்ஜிஓ பார்ட்னர் ஹார்ட்ஃபுல்னெஸ் உடன் இணைந்து உள்ளூர் மக்களுடன் கைகோர்த்து மரங்களைப் பராமரிக்கும். அதேபோல் ஜியோடேகிங் செய்யத் தேவையான தொழில்நுட்ப வசதிகளையும் வழங்கி ஊட்டச்சத்து மேலாண்மையை உறுதிசெய்ய குறைந்தபட்சம் இரண்டாண்டுகள் அவற்றின் வளர்ச்சியைக் கண்காணிக்கும்.

ஃபாரஸ்ட் பை ஹார்ட்ஃபுல்னெஸ் தனியுரிமை பெற்றுள்ள ஹார்ட்டிகல்சர் ஹை டென்சிடி மரக்கன்றுகள் நடும் முறையைப் பயன்படுத்தி 25,000 மரங்கள் நடப்படும். இந்த முறை ஆக்டிவேட் செய்யப்பட்ட உயிர்கரி பயன்படுத்தி மண் மறுசீரமைப்பு, மண்புழு உரம், மாட்டு எரு, தேங்காய் நார் உரம் போன்றவற்றை உள்ளடக்கியது. 100 வெவ்வேறு வகையான மரக்கன்றுகளைக் கொண்டு போஷ் குளோபல் சாஃப்ட்வேர் டெக்னாலஜிஸ் சிறு காடு உருவாக்க உள்ளது. மரக்கன்று நடும் முயற்சிக்கு உள்ளூர் மரங்களாகவும் அந்தக் குறிப்பிட்ட பகுதியில் காணப்படுவதாகவும் ஒன்றோடொன்று வேரூன்றி வளரும் வகையிலும் மரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

மேலும் படிக்க