December 23, 2016
தண்டோரா குழு
அமெரிக்க அதிபர் பதவிக்குத் தேர்வாகியுள்ள டொனால்ட் டிரம்ப்பின் மகளுடன் விமானத்தில் தகராறு செய்த பயணி ஒருவர் வெளியேற்றபட்டுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற டொனால்ட் டிரம்ப் அடுத்த மாதம் பதவி ஏற்கவிருக்கிறார். அவரது மகள் இவன்கா மேரி டிரம்ப் (35), அவருடைய கணவர் மற்றும் குழந்தையுடன் விடுமுறைக்காக ஹவாய் பயணமாக இருந்தார். அதன்படி, அமெரிக்காவின் ஜான் எஃப் கென்னெடி விமான நிலையத்தில் இருந்து ஹவாய் செல்லும் விமானத்தில் ஏறி, இருக்கையில் அமர்ந்திருந்தனர்.
அங்கு வந்த ஒருவர் அவரைக் கண்டதும் கோபம் கொண்டு, “உன்னுடைய தந்தை நாட்டை பாழாக்கிவருகிறார். உங்களை யார் இந்த விமானத்தில் வருமாறு அழைத்தது? நீங்கள் தனி விமானத்தில் பயணிக்கலாமே…” என்று கூறியுள்ளார். இதனையடுத்து, அவர் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.
வெளியேற்றப்பட பயணி அமெரிக்காவின் புருக்லின் நகரில் வக்கீலாக பணி செய்துவருபவர் என்று தெரிய வந்ததுள்ளது. இச்சம்பவம் குறித்து வெளியேற்றப்பட பயணியின் மனைவி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “எனது கணவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதற்காக விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்” என்று கூறியுள்ளார்.