• Download mobile app
28 Nov 2024, ThursdayEdition - 3214
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கல்வி நிலையங்களை மேம்படுத்துவதில் அக்கறை செலுத்துங்கள் – ஜி.ராமகிருஷ்ணன்

February 24, 2022 தண்டோரா குழு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மார்க்சிஸ்ட்கட்சியின் வெற்றி பெற்ற மன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் மன்ற உறுப்பினருக்கு உண்டான அதிகாரத்தை பயன்படுத்தி கல்வி நிலையைங்களை மேம்படுத்துவதில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சியில் வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் 12 ஆவது வார்டு வி.இராமமூர்த்தி, 24 ஆவது வார்டு ஆர்.பூபதி, 13 ஆவது வார்டு என்.சுமதி, 28 ஆவதுவார்டு கண்ணகி ஜோதிபாசு ஆகியோரும், காரமடை நகராட்சி 1 ஆவது வார்டில் வெற்றிபெற்ற ரா.பிரியா, பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் 8 ஆவது வார்டில் வெற்றி பெற்ற என்.சிவராஜ், 1 ஆவது வார்டு உமாதேவி, இருகூர் பேரூராட்சியில் 8 ஆவது வார்டில் வெற்றி பெற்ற ஸ்டாலின்குமார்,3 ஆவது வார்டில் வெற்றிபெற்ற ராஜேஷ்வரி சண்முகம், அன்னூர் பேரூராட்சி 8 ஆவது வார்டில் வெற்றி பெற்ற முகமது முசீர்,5 ஆவது வார்டில் வெற்றி பெற்ற மணிகண்டன்,சூலூர் பேருராட்சியில் 7 ஆவது வார்டில் வெற்றி பெற்ற எம்.வேலுச்சாமி, இடிகரை பேருராட்சி 13 ஆவது வார்டில் வெற்றிபெற்ற கற்பகம் குப்புராஜ், வேட்டைக்காரன் புதூர் 15 ஆவது வார்டில் வெற்றி பெற்ற சாத்துக்குட்டி ஆகிய 14 பேர் கோவை மாவட்டத்தில் மன்ற உறுப்பினர்களாக வெற்றி பெற்றுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் வெற்றிபெற்ற மன்ற உறுப்பினர்கள் அனைவரும் வியாழனன்று காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு அலுவலகத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதனைத்தொடர்ந்து வெற்றி பெற்ற மன்ற உறுப்பினர்களுக்கு தலைவர்கள் சால்வை அணிவித்து கௌரவித்தனர்.

இதனைத்தொடர்ந்து ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில்,

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களத்தின் கோவை மாவட்டத்தின் முடிவுகளை தமிழகத்தின் அரசியல் நோக்கர்கள் உற்று நோக்கிக்கொண்டிருந்தனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் பத்து சட்டமன்ற தொகுதிகளையும் நாங்கள் வென்றோம் உள்ளாட்சி தேர்தலிலும் அனைத்தையும் நாங்கள்தான் வெல்வோம் என்கிற மமதையோடு அதிமுகவும், நாங்கள்தான் எல்லாம் என்கிற வெற்று கொக்கரிப்போடு பாஜகவும் இருந்தது. ஆனால் தமிழகத்திலேயே கோவை மாநகராட்சியில் மிக குறைந்த அளவிற்கு 3 இடங்களில் மட்டும் வெற்றி பெற்ற அதிமுக, ஒரு இடங்களிலும் வெற்றி பெறாதது மட்டுமல்லமல் 86 வார்டுகளில் டெபாசிட் இழந்த பாஜக என தேர்தல் களம் திமுக கூட்டணிக்கு வெற்றியை அள்ளி வழங்கியுள்ளது.

மாநகராட்சியில் மட்டுமல்லாது, நகராட்சி, பேரூராட்சி என அனைத்திலும் திமுக கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. அத்தகைய வெற்றியை ஈட்டி வந்துள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் வெற்றியாளர்களுக்கு கட்சியின் மாநிலக்குழுவின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதி என்பது மிகப்பெரியது. நேரிடையாக மக்களை சந்திப்பதில் சிரமம் உள்ளது. ஆனால் அன்றாடம் மக்களோடு இருப்பவர்கள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பொருப்பை பெற்றுள்ள நமது கட்சியின் உறுப்பினர்கள் மக்களின் அன்றாட அடிப்படை பிரச்சனைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

அதேநேரத்தில் மன்ற உறுப்பினர்களின் அதிகாரத்தை பயன்படுத்தி நமது பகுதியில் உள்ள கல்வி நிலையங்களை மேம்படுத்துவது, தரம் உயர்த்துவதில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று அனைத்து குடும்பங்களிலும் நெருக்கத்தை ஏற்படுத்துவதும், எளிய குடும்பத்தினர் வீட்டு பிள்ளைகளின் கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பது என்பதில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும்.அனைவருக்கும் கல்வி என்கிற இலக்கில் கவனம் செலுத்தினால் அது சம்பந்தப்ப்ட்ட குடும்பத்தை அடுத்த உயரத்திற்கு கொண்டு செல்ல பேரூதவியாக இருக்கும். அத்தகைய உண்ணதமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

மேலும் படிக்க