February 25, 2022 தண்டோரா குழு
சார்ஜாவில் இருந்து கோவை வந்த பெண் பயணி உட்பட 4 பேரிடம் 2.59 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கோவை விமான நிலையத்தில் இன்று அதிகாலை சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானம் வந்தது. அப்பொழுது சுங்க அதிகாரிகள் சோதனை கொண்டிருந்தன.இதை தொடர்ந்து சந்தேகத்திற்கிடமான கோவையைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட மூன்று பேர் நடந்து கொண்டனர். அவர்கள் 4 பேரையும் ஆய்வு செய்ததில் தொப்பி மற்றும் ஜீன்ஸ் பேண்ட் இடையில் தங்கக்கட்டிகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதை தொடர்ந்து 4 பேரையும் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சுங்க அதிகாரிகளுக்கு கிடைத்த கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கோவை வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள், கோவையைச் சேlர்ந்த உமா (வயது 34), கடலூரைச் சேர்ந்த பி.பாரதி (வயது 23), தஞ்சையைச் சேர்ந்த பி.திருமூர்த்தி (வயது 26) ஆகிய 4 பேரை மடக்கிப் பிடித்தனர்.24.02.2022 அன்று ஏர் அரேபியா விமானம் மூலம் ஷார்ஜாவில் இருந்து கோவைக்கு தங்கம் மறைத்து கொண்டு வந்த திருச்சியைச் சேர்ந்த விக்னேஷ் கணபதி (வயது 29).
அவர்களிடமிருந்து முழங்கால் தொப்பி ஜீன்ஸ் பேண்ட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கம் மீட்கப்பட்டது.மொத்தமாக கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு தங்கத்தின் மொத்த அளவு ரூ.2.59 கோடி மதிப்புள்ள 4.9 கிலோ ஆகும். இந்த நிலையில், மேற்படி நான்கு பயணிகளையும் அதிகாரிகள் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.