• Download mobile app
28 Nov 2024, ThursdayEdition - 3214
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோயமுத்தூர் மேனேஜ்மென்ட் அசோசியேஷன் சார்பில் தொழில் முனைவோர் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு விருதுகள்

February 25, 2022

கோயம்புத்தூர் மேலாண்மை சங்கம் (சி.எம்.ஏ) சார்பில் தொழில் துறையில் சிறந்து விளங்கும் தொழில் முனைவோர், மேலாளர்கள் மற்றும் மேலாண்மைத் துறை பேராசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா கோவையில் உள்ள ஐ.டி.சி. ஓட்டலில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சி.எம்.ஏ. தலைவர் ஜெயக்குமார் ராமதாஸ் பேசுகையில்,

“நிறுவனங்களின் வளர்ச்சியில் மேலாண்மைத் துறையின் பங்கு அதிகரித்து வருகிறது . மேலும் கோவைப்பகுதியில் மேலாண்மை துறைகளில் முன்னணியில் உள்ளவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்குவதில் பெருதமிதம் கொள்கிறோம்’என்றார்.

விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட டி.வி.எஸ். இன்ஸ்டிட்யூட் ஃபார் குவாலிட்டி மற்றும் லீடர்ஷிப் ( TVSIQL ) இயக்குநர் டாக்டர் வி கோவைச்செல்வன் நிச்சயமற்ற காலங்களில் கம்பெனிகளின் வளர்ச்சிப் பயணத்தைப் பற்றி கோவைசெழியன் பேசியதாவது:நிறுவனங்கள் நிச்சயமற்ற காலங்களிலும் தங்களை சரியான வளர்ச்சிப் பாதையில் செல்வதற்கு தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.

தற்பொழுது பல நிறுவனங்களில் மேலாண்மை என்பது நிர்வாகத்தின் மேல் தட்டிலுள்ள சிலரை மட்டுமே சார்ந்ததாக இருக்கிறது.அவ்வாறு இல்லாமல் நிறுவனத்தில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் மேலாண்மை செயல்முறைகள் சென்றடைவது அவசியம்.அதற்கு நிர்வாக செயல் முறைகளை எளிமைப்படுத்தி பணிபுரியும் அனைவருக்கும் பயிற்சி அளிப்பது அவசியம்.

தொழில் செய்வதைக் கற்பதில் பொதுவாக இரண்டு வழி முறைகள் உள்ளன.முதல் வழி பணியைச் செய்துகொண்டே பயில்வது.இதற்கு உதாணரமாக க்ளீனர்கள் சிறிது சிறிதாக டிரைவர்களாவது.இதில் தவறான பல வழிமுறைகளை பயில்வதால் உற்பத்தித் திறன் பெரிதும் குறைகிறது.இரண்டாவது வழியானது சரியான பயிற்சியைப் பெற்று,பிறகு தொழிலில் ஈடுபடுவது. சில ஆண்டுகள் கடும் பயிற்சி பெற்ற பின்னரே விமான ஓட்டிகள் பணியில் அமர்த்தப்படுவது உதாரணமாகும். இவ்வாறு செய்யும் பொழுது பணியில் எவ்வித தவறும் இன்றி சிறப்பாக அமைகிறது.

முதல் வழியால் சரியான பயிற்சி இல்லாததால் சாலைகளில் அதிகப்படியான விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படுகிறன. ஆனால் விமான விபத்துகள் என்பது உலகெங்கிலும் வருடத்தில் 3 விபத்துகளே நிகழ்கின்றன என்றார்.

கோவை மேலாண்மை சங்கம் போன்றவை இப்பகுதியில் உள்ள கல்லூரிகளையும் தொழிற்சாலைகளையும் இணைத்து அனைவருக்கும் முறையான பயிற்சி அளிக்கலாம் என்றார். விருது பெற்றவர்களுக்கு தனது பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார் . சி.எம்.ஏ தலைவர் ஜெயக்குமார் ராமதாஸ் . செயலர் நித்யானந்தன் தேவராஜ் சிறப்பு விருந்தினர் வி.கோவைச்செல்வன் ஆகியோர் விருதுகளை வழங்கினர்.

சி.எம்.ஏ. விருது பெற்றவர்கள் :

சி.எம்.ஏ.-ரூட்ஸ் சிறந்த தொழில் முனைவோருக்கான விருது

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் பி.லிட்.,நிர்வாக இயக்குநர் எம் கிருஷ்ணன்

சி.எம்.ஏ.-மகேந்திரா சிறந்த சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கான விருது

கோண்டாஸ் ஆட்டோமேஷன் நிர்வாக இயக்குநர் , சஞ்சய் கோண்டாஸ சி.எம்.ஏ.-ஜி.ஆர்.ஜி.

சிறந்த பெண் தொழில் முனைவோருக்கான விருது :

ஜூசி கெமிஸ்ட்ரி இணை நிறுவனர் மேகா ஆஷர் சி.எம்.ஏ.குவாட்ரா

சிறந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்திற்கான விருது

ஆஸ்ட்ரிக் இஞ்சினியரிங் ஸ்ரீப்ரியா

சி.எம்.ஏ. டி.ஜெ.சிறந்த மேலாளளர் விருது

தி ஹிந்து திசை பொது மேலாளர் , தி
டி.ராஜ்குமார்

சி.எம்.ஏ. ஜி.ஆர்.டி.சிறந்த மேலாண்மை ஆசிரியருக்கான விருது

டி.ஜெ.அகாடெமி , இணை பேராசிரியர் டாக்டர் தீபா வேணுகோபால்

சி.எம்.ஏ.-எஸ்.டி.சி. சிறந்த மேலாண்மை ஆராய்ச்சியாளருக்கான விருது

பி.எஸ்.ஜி.ஐ.எம் . பேராசிரியர் டாக்டர் தீபா ரங்கநாதன்

விருது பெற்றவர்கள் கோயம்புத்தூர் மேனேஜ்மென்ட் அசோசியேஷன் தங்களுக்கு வழங்கிய அங்கீகாரத்திற்கு பெரு மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் படிக்க