February 26, 2022 தண்டோரா குழு
கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளுக்கான நகர்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ம் தேதி நடந்தது. மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 778 வேட்பாளர்கள் போட்டியிட்டினர். கடந்த 22ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் திமுக கூட்டணி 96 இடங்களில் வெற்றி பெற்றது. அதிமுக 3 இடங்களிலும்,எஸ்.டி.பி.ஐ கட்சி 1 இடத்திலும் வெற்றி பெற்றது.வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு அன்றைய தினமே சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனிடையே கோவை மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் வார்டு கவுண்சிலர்களாக பதவியேற்கும் கூட்டம் மாநகராட்சி கலையரங்கத்தில் மார்ச் 2ம் தேதி நடக்கிறது.
இதன் பின்னர் மார்ச் 4ம் தேதி காலை 9.30 மணிக்கு மேயர் பதவிக்கான மறைமுக தேர்தலும், மதியம் 2.30 மணிக்கு துணை மேயர் பதவிக்கான மறைமுக தேர்தலும் தேர்தல் நடத்தும் அதிகாரியான மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடக்கிறது.