February 28, 2022 தண்டோரா குழு
கோவை மாநகராட்சி 49-வது வார்டில் வெற்றி பெற்ற திமுக கவுன்சிலர் அன்னக்கொடி எத்திராஜ் பொதுமக்களுக்கு வீடு வீடாக சென்று இனிப்புகள் வழங்கி நன்றி தெரிவித்தார்.
கோவையில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 96 இடங்களை கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றது இந்நிலையில் கோவை மாநகராட்சி 49-வது வார்டு பகுதியில் திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் அன்னக்கொடி 5397 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இந்நிலையில் கவுன்சிலர் அன்னக்கொடி எத்திராஜ், தமக்கு வாக்களித்த பொது மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கோவிந்தசமி தோட்ட சாலை,காட்டூர் வீதி,பேரா நாயுடு வீதி உள்ளிட்ட 49 வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில், வீடு வீடாகச் சென்று இனிப்புகள் வழங்கி நன்றி தெரிவித்தார்.. இதில் அவருடன் தி.மு.க.நிர்வாகிகள் எத்திராஜ், தம்பு, எலிசபத்,தாஸ்,நாகராஜ் மற்றும் மதசார்பற்ற கூட்டணி கட்சி நிர்வாகிகள் தென்றல் நாகராஜ், சண்முக வடிவு, ரங்கநாதன், கிருஷ்ணன், கோவிந்தராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.