• Download mobile app
28 Nov 2024, ThursdayEdition - 3214
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பருத்தியின் மீதான 11% இறக்குமதி வரி நாட்டில் பருத்தி சந்தை நிலையை மோசமாக்கியுள்ளது – ரவி சாம்

February 28, 2022 தண்டோரா குழு

கடந்த ஆண்டு மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவித்த பருத்தியின் மீதான 11% இறக்குமதி வரி நாட்டில் பருத்தி சந்தை நிலையை மோசமாக்கியுள்ளதாக தென் இந்திய பஞ்சாலைகள் கழகம் தெரிவித்துள்ளது.

பருத்தி பற்றாக்குறை குறித்து தென் இந்திய பஞ்சாலைகள் கழக தலைவர் ரவி சாம் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

பருத்தி உச்சபட்ச விலையில் உள்ளத்காகவும், பருத்தியின் தரமும் மிக குறைவாக உள்ளது.ஆந்திராவில் பல ஆலைகள் பணியை நிறுத்தியுள்ள நிலையில் எப்போதும் இல்லாத அளவிற்கு ஒரு ஆண்டில் பருத்தியின் விலை 62% உயர்ந்து ஒரு கிலோ 135 ரூபாயிலிருந்து 219 ஆக அதிகரித்துள்ளது.

40 லட்சம் பேல்கள் பருத்தியை வரியில்லாமல் இறக்குமதி செய்ய அனுமதித்து வேலை வாய்ப்பு இழப்பை தவிர்க்க வேண்டும். நேரடியாக பருத்தி ஆலைகளுக்கு வந்து சேர வேண்டும் ஏற்றுமதியாளர்கள் ஏற்கனவே ஒப்பந்தம் செய்து கொண்ட ஆர்டர்களை நிறைவேற்றுவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது.கடந்த ஆண்டு மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவித்த பருத்தியின் மீதான 11% இறக்குமதி வரி நாட்டில் பருத்தி சந்தை நிலையை மோசமாக்கியுள்ளதாக கூறினார்.

மேலும், விதையுடன் கூடிய பருத்தியின் விலை குறைந்தபட்ச ஆதரவு விலையை விட 70% அதிகமாக இருப்பதால் விவசாயிகள், ஜின்னர்கள் மற்றும் வியாபாரிகள், மேலும் விலை உயரும் நம்பிகையில் பருத்தியை பதுக்கி வைத்துள்ளனர் எனவும் MCX மற்றும் NCDEX போன்ற தளங்களை பயன்படுத்தி சில பருத்தி வர்த்தகர்கள் செயற்கையான பற்றாக்குறையை உருவாக்கி அதன் மூலம் ஊக வணிகத்தில் ஈடுபடுகின்றனர் எனவும் அவர் குற்றம் சாட்டினார்.

பருத்தி சீசன் இல்லாத காலத்திலும் தொழிலாளர்கள் வேலை இழப்பை தடுக்க பிரதமர் பருத்தி கொள்கையில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் 15 ஆண்டுகளாக நீடித்த மந்தநிலை காரணமாக நூற்புத் திறனில் 35% க்கும் மேலான நூற்பாலைகள் நவீனப்படுத்திக் கொள்ள முடியாத காரணத்தால் ஏற்கனவே ஜவுளி அமைச்சகம் பரிந்துறைத்தபடி பருத்தி தொழில்நுட்ப பணி 2.0 வை நடைமுறைப்படுத்துமாறு பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதன் மூலம் தொழில்நுட்ப மேம்பாடு, தொழில்நுட்ப பறிமாற்றம், சுத்தமான பருத்தி, ஜவுளி தயாரிப்புளை ஊக்குவித்தல் போன்றவர்றை செய்ய முடியும் எனவும் 2.0 மூலம் விவசாயிகளும், தொழில்துறையும் பயன்பெற்று 20 மில்லியன் புதிய வேலை வாய்ப்புகள் ஜவுளித்துறையில் உருவாக வாய்ப்புள்ளதாகவும் இதன் மூலம் இந்திய ஜவுளித்துறையின் மதிப்பான 162 பில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து 350 அமெரிக்க டாலர் சந்தை மதிப்பை அடையும் எனவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க