March 2, 2022 தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 99 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து கோவை மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 146 குழந்தை திருமணங்கள் நடைபெற்றுள்ளது. இதில் 99 திருமணங்கள் தகவல் கிடைத்து தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் 42 திருமணங்கள் குறித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதத்தில் 12 குழந்தை திருமணமும், பிப்ரவரி மாதத்தில் 11 திருமணமும் என கடந்த 2 மாதங்களில் மட்டும் 23 திருமணங்கள் நடந்துள்ளன.இதில் 15 திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. 8 திருமணங்கள் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குழந்தை திருமணத்தை தடுக்கும் வகையில் பொதுமக்கள் அதிகம் கூடும் காந்திபுரம், பொள்ளாச்சி,மேட்டுப்பாளையம் உள்ளிட்ட அனைத்து பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.