March 4, 2022 தண்டோரா குழு
மேயர் அறையில் பொதுமக்கள்
என்னை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம் என கோவை மாநகராட்சி மேயர் கல்பனா கூறியுள்ளார்.
கோவை மாநகராட்சி மேயர் கல்பனா நிருபர்களிடம் கூறியதாவது:
கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக என்னை அறிவித்து எனக்கு இந்த உயரிய பதவியை வழங்கிய தமிழக முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.இந்த அறிய வாய்ப்பை வழங்கிய முதல்வருக்கும், இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கும், மின்சாரத்துறை அமைச்சருக்கும், மாமன்ற உறுப்பினர்கள், தோழமை கட்சியினர் அனைவருக்கும் நன்றியை
தெரிவித்துக்கொள்கிறேன்.
கோவை மாநகராட்சியின் உள்ள பொதுமக்கள் அனைவரையும்நானே நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்து அதை நிறைவேற்ற
பாடுபடுவேன்.கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் அறையில் பொதுமக்கள் என்னை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம்.
நான் மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றுவேன். திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய தலைவரும், தமிழக
முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்
அடிமட்ட உறுப்பினராக இருந்த என்னை உயரிய பதவியில் அமர வைத்து அழகு பார்த்துள்ளார். அவரது பெயருக்கு பெருமை சேர்க்கும்
வண்ணம் நான் பணியாற்றுவேன்.
மாநகராட்சி கமிஷனர்,
மின்சாரத்துறை அமைச்சர், மாநகராட்சி அதிகாரிகளோடு கலந்தாலோசித்து மாநகராட்சியை மேம்படுத்துவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் தடை
இன்றி குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்வேன். தெருவிளக்கு, சாலை வசதி, குடிநீர் வசதி, குப்பைகளை சுத்தம் செய்தல், மாநகராட்சி பள்ளிகளை மேம்படுத்துதல், கோவை மாநகர
அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.