March 4, 2022
தண்டோரா குழு
செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து வருபவர்,ஐபிஎஸ் அதிகாரி அரவிந்தன்.சமூக வலைத்தளங்களில் எப்பவுமே ஆக்டிவாக இருக்கும் இவர் காவல்துறையில் சிறப்பாகப் பணியாற்றியதற்காக தமிழ்நாடு அரசின் அண்ணா விருது பெற்றுள்ளார்.
இந்நிலையில் இவர் தனது சமூக வலைதளத்தில் அவரது சகோதரர் அபிநந்தனுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.அவர் அச்சுஅசலாக இவரை போலவே
ஐ.பி.எஸ்.உடையில் போஸ் கொடுத்து
நிற்கிறார்.முடிந்தால் ஆறு வித்தியாசத்தை கண்டுபிடியுங்கள் என்பது போல் இருக்கும் அந்த புகைப்படத்தை பார்த்து சமூக வலைதளவாசிகள் ஆச்சரியப்பட்டுள்ளனர்.
அபிநந்தனும் டெல்லி காவல் துறையில் உதவி ஆணையராகப் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.