• Download mobile app
15 Jan 2025, WednesdayEdition - 3262
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அப்படியே இந்தப் படத்துக்கும் ஒரு வழிய சொல்லுங்க… கவுதம் மேனனிடம் கார்த்திக் நரேன் கேள்வி!

November 4, 2019 தண்டோரா குழு

தனுஷ் நடிப்பில் இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் எனை நோக்கி பாயும் தோட்டா. படப்பிடிப்பு நிறைவடைந்து பல மாதங்கள் ஆயும் பல்வேறு பிரச்னைகளால் பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு திரைக்கு வராமல் இருந்து வந்தது. இதற்கிடையில் இந்தப் படம் நவம்பர் 29-ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட முடிவு செய்துள்ளது. எனை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம் ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் கவுதம் மேனன் ஜோஸ்வா இமைபோல் காக்க என்ற படத்தையும் இயக்கி வருகிறார்.

வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்ட படக்குழு 2020-ம் ஆண்டு காதலர் தினத்துக்கு படம் திரைக்கு வரும் என்றும் அறிவித்துள்ளனர். இதுமட்டுமின்றி துருவ நட்சத்திரம் படம் குறித்துப் பேசிய இயக்குநர் கவுதம் மேனன், அடுத்த 60 நாட்களில் படத்தின் பணிகள் முடிவடைந்து படம் விரைவில் வெளியாகும் என்று கூறியுள்ளார். ஒரே நாளில் இந்த அறிவிப்புகள் எல்லாம் வெளியான நிலையில், கவுதம் மேனனின் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைத்துவிட்டதாக ரசிகர்கள் நினைத்தனர்.

இதற்கிடையே துருவங்கள் 16 படத்தின் முலம் புகழ்பெற்ற இயக்குநர் கார்த்திக் நரேன், நரகாசூரன் என்ற படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண், ஆத்மிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கவுதம் மேனன் மற்றும் பத்ரி கஸ்தூரி ஆகிய இருவரும் இணைந்து நரகாசூரன் படத்தைத் தயாரிக்கவுள்ளதாக ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால் பட வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டதால் சமூகவலைதளங்களில் கார்த்திக் நரேனும், கவுதம் மேனன் ஒருவரையொருவர் தாக்கி கருத்து பதிவிட்டனர்.

பின்னர் எனக்கும் கார்த்திக் நரேனுக்கும் எனக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் களையப்பட்டு விட்டன. படம் விரைவில் வெளிவருவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம் என்று கவுதம் மேனன். கடந்த வருடம் கூறினார்.இந்நிலையில் தனது அடுத்தடுத்த படங்களின் அப்டேட்டுகளை வெளியிட்ட இயக்குநர் கவுதம் மேனனிடம் கார்த்திக் நரேன் கேள்வி எழுப்பியுள்ளார். அதில், நரகாசூரன் படம் எப்போது வெளிவரும் என்று சொன்னால் உதவியாக இருக்கும். இந்தப் படம் என் மனதுக்கு நெருக்கமானது என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க