• Download mobile app
15 Jan 2025, WednesdayEdition - 3262
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆரம்பித்த முதல்நாளே தண்ணீரால் பிக்பாஸ் வீட்டுக்குள் பிரச்சனையா !

June 24, 2019 தண்டோரா குழு

பிரபல தொலைக்காட்சியில் உலக நாயகன் கமலஹசான் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி நேற்று பிரம்மாண்டமாக ஆரம்பமானது.

இதில் சேரன், ஜாங்கிரி மதுமிதா, சாண்டி மாஸ்டர், பாத்திமா பாபு, மோகன் வைத்யா, செரின், சாக்ஷி அகர்வால், மலேசியாவை சேர்ந்த மாடல்கள் இருவர், பருத்திவீரன் சரவணன், அபிராமி வெங்கடாச்சலம், ரேஷ்மா, வனிதா விஜயகுமார் இலங்கை
செய்தி வாசிப்பாளர் லூசியா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.முதல் இரண்டு சீசனை விட இந்த முறை வீட்டில் நிறைய மாற்றங்கள் அரங்கேறியுள்ளது. குறிப்பாக ஓவியங்களும் புகைப்படங்களும். இதில் கமலின் விருமாண்டி புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், இன்றைய நிகழ்ச்சிக்கான புரோமோ வீடியோக்கைளை பிக்பாஸ் குழு வெளியிட்டுள்ளது. அதில், தண்ணீருக்கும், எரிவாயுவுக்கும் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளதாக பிக்பாஸ் தெரிவிக்க அனைவரும் கைதட்டி வரவேற்கின்றனர். அப்போது பேசிய பாத்திமா பாபு, பிக்பாஸ் வீட்டில் தண்ணீர் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்ற நிலை வந்திருப்பது ஒரு அவலம் அதை கைதட்டி வரவேற்க வேண்டியதில்லை என்கிறார்.

உடனே சேரன், தண்ணீர் பயன்படுத்துவதற்காக ஒரு அளவீடு கொடுக்கப்பட்டிருப்பது. தண்ணீரின் சிக்கனத்தை கொண்டுவந்ததற்காகத் தான் கைதட்டி வரவேற்றோம் என்கிறார். ஆரம்பித்த முதல்நாளே தண்ணீரால் வீட்டுக்குள் பிரச்னை எழுந்துள்ளதா என்ற கேள்வி எழுகிறது.

மேலும் படிக்க