• Download mobile app
08 Sep 2024, SundayEdition - 3133
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இசைப்புயலை பற்றி பாகுபலி இசை அமைப்பாளரின் நெகிழ்ச்சியான பதில்

May 8, 2017 தண்டோரா குழு

எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் கடந்த ஏப் 28ம் தேதி வெளிவந்த ‘பாகுபலி-2’ படம் ஆயிரம் கோடி வசூல் சாதனை படைத்தது. இப்படத்தின் வெற்றிக்கு பின்னால் பல காரணங்கள் இருந்தாலும், படத்தின் இசை மிகப்பெரிய பங்கினை வகிக்கிறது என்பதில் சந்தேகமுமில்லை.

இந்நிலையில் இசையமைப்பாளரான எம்.எம்.கீரவானியிடம், இந்த படத்தின் பாடல்களில் தென்னிந்தியாவின் முன்னணி பாடகர், பாடகிகளை அவர் பயன்படுத்தாதது ஏன்❓என்று சமூக வலைத்தளத்தில் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த அவர்,

இதற்கு முக்கிய காரணம் ஏ.ஆர்.ரஹ்மான் தான் என்றும்,அவர்தான் சின்ன சின்ன பாடகர்களை பெரிய ஆளாக்கியவர் என்றும், அவருடைய வழியை தானும் பின்பற்றியதாகவும் கூறினார்.
கடந்த 90ஆம் ஆண்டுகளில் இருந்தே ஏ.ஆர்.ரஹ்மான் ஏராளமான புதிய பாடகர், பாடகிகளை அறிமுகப்படுத்தி வருகிறார். இதில் பலர் தற்போது முன்னணி பாடகர்களாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க