• Download mobile app
08 Sep 2024, SundayEdition - 3133
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சாய் பல்லவிக்கு போட்டியாக அவரது தங்கை

May 2, 2017 தண்டோரா குழு

பிரேமம் திரைப்பட புகழ் மலர் டீச்சருக்கு போட்டியாக அவரது தங்கை களமிறங்க உள்ளார்.

மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சராக நடித்த சாய் பல்லவி, மலையாளத்தில் பிஸியான நடிகையாக உள்ளார். மலையாளத்தில் தமிழ் பெண்ணாக நடித்து ரசிகர்களின் மனங்களை கவர்ந்த சாய் பல்லவி, இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தமிழ் திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சாய் பல்லவிக்கு போட்டியாக அவரது தங்கை பூஜா கண்ணன் கோலிவுட்டில் களமிறங்க உள்ளார். இதற்கு முன்னோட்டமாக பூஜா கண்ணன் நாயகியாக நடித்த காரா என்ற குறும்படம் இன்று யுடியுப்பில் வெளியிடப்பட்டது. கோவை காந்திபார்க் பகுதியில் உள்ள ஒரு திரையரங்கில் திரையிடப்பட்ட இந்த குறும்படத்தை பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் பார்த்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பூஜா கண்ணன்,

கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இளங்கலை ஆங்கிலம் படித்து வருவதாக தெரிவித்தார். அக்கா சாய் பல்லவி சினிமா துறையில் இருப்பதால் தனக்கும் பட வாய்ப்புகள் வருவதாகவும், படிப்பு முடிந்த உடன் திரைப்படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறிய பூஜா கண்ணன், நல்ல கதையுடன் கூடிய பட வாய்ப்புகள் வந்தால் தற்போதே படங்களில் நடிக்க ரெடியாக இருப்பதாக தெரிவித்தார். கோவையை சேர்ந்த இளைஞர்கள் உருவாக்கியுள்ள இந்த காரா குறும்படத்தை, ஆஜித் என்ற இளைஞர் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க