February 25, 2019
தண்டோரா குழு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வருபவர் சிவகார்த்திகேயன். தற்போது ராஜேஷ் இயக்கத்தில் மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் மே 1ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர்.
இப்படத்தை தொடர்ந்து இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். தற்போது இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அரசியல் கலந்த த்ரில்லர் கதையாக இந்த படம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரபல மலையாள இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி நடிக்கவிருக்கிறார்.
இந்நிலையில் இந்த படத்தில் மற்றுமொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை இவானா ஒப்பந்தமாகியுள்ளார். நடிகை இவானாவின் பிறந்தநாளான இன்று, இந்த அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளர். மேலும் இந்த படத்தில் நடிகர் அர்ஜுன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.