இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் வெளியான ‘சீம ராஜா’ படத்தை தொடர்ந்து சிவர்கார்த்திகேயன் தன் சொந்த தயாரிப்பு படமான கனா படத்தில் நடித்து இருந்தார்.
சிவகார்த்திகேயன் ‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சயின்ஸ்பிக்ஷன் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால், ராஜேஷ் இயக்கத்தில் பெயர் சூட்டப்படாத படத்தில் நடித்து வந்தார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தில் காமெடி நடிகர் சதீஷ் நடிக்கிறார்.
இதற்கிடையில், ‘மிஸ்டர் லோக்கல்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியிடப்பட்டது. இந்நிலையில், இப்படம் மே 1ம் தேதி ரிலீசாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். தல 59 படமும் மே 1ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈஷாவில் அறுபத்து மூவர் எழுந்தருளல் மற்றும் உலா!ஆதியோகி முன்பு சிவனடியார்கள் புடைசூழ நடைபெற்றது
ஈஷா தமிழ்த் தெம்பு திருவிழா கொண்டாட்டங்கள் நிறைவு -12 நாட்கள் நடைபெற்ற விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கோவை புரோஜோன் மாலில் ஆடை அலங்கார போட்டி (பேஷன் ஷோ) நிகழ்ச்சி
வில்லா சந்தையில் கால் பதித்தது கே ஜி குரூப்பின் டவுன் & சிட்டி டெவலப்பர்ஸ் நிறுவனம்
புனித வின்சென்ட் தே பவுல் சபை சார்பில் நடைபெற்ற தவக்கால இரத்த தான முகாம்
தமிழ்த் தெம்பு திருவிழாவில் விறுவிறுப்பாக நடைபெற்ற ரேக்ளா பந்தயம் – மூன்று நாட்களாக நடைபெற்ற மாபெரும் நாட்டு மாட்டு சந்தை நிறைவு