March 19, 2019 தண்டோரா குழு
ஏ.ஆர். முருகதாஸின் சர்கார் படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் அட்லி இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார்.
இக்கூட்டணி தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து 3-வது முறையாக இந்த கூட்டணி இணைந்துள்ளது. இந்தப் படத்தில் நயன்தாரா, கதிர்,
விவேக், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் நாள்தோறும் விஜயை காண ரசிகர்கள் கூட்டமாக வந்து செல்கின்றனர். இப்படம் தீபாவளியன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை அந்நிறுவனமே உறுதி செய்துள்ளது.