February 10, 2017
tamilsamayam.com
பிரம்மாண்ட ‘பாகுபலி’ படத்தின் இயக்குனர் ராஜமௌலி, ‘ஃபார்ம்வில்’ மற்றும் ‘லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ்’ உள்ளிட்ட பிரபல மொபைல் விளையாட்டுக்களை வடிவமைத்த மார்க் ஸ்காக்ஸ் உடன் கைக்கோர்த்திருக்கிறார்.
மார்க் ஸ்காக்ஸ் வடிவமைத்த மொபைல் விளையாட்டுகள் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில், ‘பாகுபலி’ மொபைல் விளையாட்டை வடிவமைக்க இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி மார்க் ஸ்காக்ஸ் உடன் இணைந்துள்ளார். இந்த தகவல் பாகுபலி திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் சூசகமாக பதிவிடப்பட்டுள்ளது.
‘பாகுபலி’ வெறும் திரைப்படமாக மட்டுமல்லாமல் நாவல், காமிக்ஸ், அனிமேட்டட் சீரிஸ் என பல்வேறு வகைகளில் பிரபலமாகி வருகிறது. தற்போது ‘பாகுபலி 2’ இறுதிக் கட்டப் பணிகளை எட்டியுள்ள நிலையில், இப்படம் திட்டமிட்டப்படி வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.
பிரபாஸ், ராணா, அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள ‘பாகுபலி 2’ தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.