July 12, 2018
தண்டோரா குழு
நடிகர் நாசரின் மகன் அபி மெஹதிக்கு ஜோடியாக கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கமல்ஹாசன்,திரிஷா நடித்த `தூங்காவனம்’ படத்தை இயக்கியவர் ராஜேஷ் எம்.செல்வா.இவர் அடுத்ததாக விக்ரம்,அக்ஷரா ஹாசன் நடிக்கும் புதிய படத்தை இயக்க இருக்கிறார்.ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் அக்ஷரா ஹாசனுக்கு ஜோடியாக,நடிகர் நாசரின் இளைய மகன் அபி மெஹதியும் ஜோடியாக நடிக்கவுள்ளார்.அபியின் சகோதரர் லுத்புதீன் ஏற்கனவே சைவம்,பறந்து செல்ல வா ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.