July 19, 2017
tamilsamayam.com
விவேகம் படம் தயாராகி வரும் நிலையில், அஜித்தின் அடுத்த படத்தை செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளும், இயக்குனருமான செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள ‘விஐபி 2’ படம் இம்மாதம் வெளிவர தயாராக உள்ளது. இப்படத்தின் புரமோஷன் வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன.
இதுகுறித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்த செளந்தர்யா பேசியதாவது:
நீங்கள் எந்த நடிகரை இயக்க ஆவலாக உள்ளீர்கள் என்ற கேள்விக்கு, ‘அஜித்’ என பதிலளித்துள்ளார். அஜித்துக்காக ஒரு மாஸ் கதையை தயாராக வைத்துளதாகவும். விரைவில் அதை அவரிடம் கூறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனிடையே நேற்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்த அஜித்திடம், இதுகுறித்து கேட்டபொழுது, பதிலுக்கு வெறும் புன்னகையை மட்டும் பதிலாக்கி சென்றுவிட்டார்.இருப்பினும் விரைவில் அஜித்-செளந்தர்யா சந்திப்பு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.