May 30, 2018
தண்டோரா குழு
தல அஜித் தற்போது சிவா இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார்.
கிராமத்து கதையில் அஜித் இரட்டை வேடத்தில் நடித்து வருவதாக கூறப்படும் இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க,யோகி பாபு,தம்பி ராமையா,ரோபோ ஷங்கர்,விஜய் வசந்த் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் அஜித்திற்காக பிரபல நடிகரின் படத்தில் இருந்து ஒளிப்பதிவாளர் வெற்றி விலகியுள்ளார்.ஒளிப்பதிவாளர் வெற்றி ஏற்கனவே காஞ்சனா-3 படத்தில் பணியாற்றி கொண்டிருந்தார்.அந்த படத்தின் ஷூட்டிங் தள்ளி போகவே அப்படத்தில் இருந்து விலகி விஸ்வாசம் படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார்.இவர் ஏற்கனவே அஜித்தின் வீரம்,வேதாளம்,விவேகம் படத்திற்கும் ஒளிப்பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.