July 12, 2018
kalakkalcinema.com
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது உச்ச நடிகருக்கான இடத்தை தொட உள்ளார்.இந்நிலையில் இறுதியாக வெளியாகி இருந்த விவேகம் படம் அஜித்திற்கு சறுக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.
இந்த படத்தை தொடர்ந்து தல அஜித் விஸ்வாசம் படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார்.மேலும் இந்த படம் வரும் தீபாவளிக்கு உலகம் முழுவதும் திரைக்கு வர இருந்தது.ஆனால் படப்பிடிப்புகள் முழுமையாக முடிவடையாததால் பொங்கலுக்கு தள்ளி போவதாக சிவா அறிவித்திருந்தார்.இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
ஆனால் இதே தினத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தையும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகிறார்களாம்.ஒரு வேலை சூப்பர் ஸ்டாரின் படம் ரிலீசானால் மீண்டும் அஜித் படம் தள்ளி போக வாய்ப்புள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.