February 23, 2018
tamilsamayam.com
நடிகர் அஜித் நடிப்பில் வர இருக்கும் விசுவாசம் படத்தில் நடிக்க யோகி பாபு இணைந்துள்ளார்.
விசுவாசம் படத்தின் முதல் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. ஒரே கட்டமாக மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட படக்குழு திட்டமிட்டுள்ளது. பிப்ரவரி மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்குவதாக இருந்தது. ஆனால், மார்ச் மாதம் தொடங்கப்போவதாக படக்குழு முடிவு செய்திருக்கிறது.
இதில் சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கிறது. முதல் முறையாக அஜித் படத்திற்கு இமான் இசையமைக்கிறார்.
இப்படத்தில் அஜித்துடன் முக்கியக் வேடத்தில் நடிக்க யோகி பாபு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த ஆண்டு தீபாவளிக்கு விசுவாசம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.