July 15, 2017
தண்டோரா குழு
யாராலும் அடக்க முடியாத என் காளையை கிராபிக்ஸ் மூலம் விஜய்சேதுபதி அடக்குவது போல் செய்துள்ளதாக காளை உரிமையாளர் புகார் தெரிவித்துள்ளார்.
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் கருப்பன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியிடப்பட்டது. அந்த போஸ்டரில் விஜய் சேதுபதி ஒரு காளையை அடக்குவது போல் படத்தின் பர்ஸ்ட் லுக் இருந்தது.
இந்நிலையில்,திருச்சி லால்குடியை சேர்ந்த சரவணன் என்பவர் செய்தியாளர்களிடம் கூறும்போது,
விஜய் சேதுபதி நடிக்கும் கருப்பன் படத்தின் பர்ஸ்ட் லுக்கில் வெளியிடப்பட்ட அந்த காளை தனக்கு சொந்தமான கொம்பன் என்றும் தங்களது கொம்பன் காளை களத்தில் ஓடிய புகைப்படத்தை எடுத்து விஜய் சேதுபதியுடன் சேர்த்து கிராபிக்ஸ் செய்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், இது குறித்து விளக்கம் அளிக்குமாறு விஜய்சேதுபதி மற்றும் படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் காளையின் உரிமையாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.