பிரபல தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் ரசிகர்கள் மனம் கவர்ந்தவராக லாஸ்லியா இருந்தார். இதற்கிடையில் தற்போது நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு குறைந்து வருகிறது.
இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியான இரண்டாவது ப்ரோமோவில், லாஸ்லியாவின் தந்தை உள்ளே வரும் காட்சிகள் காட்டப்பட்டது. பத்து வருடமாக, தன்னுடைய தந்தையை பார்க்காமல் இருக்கும் லாஸ்லியா, தந்தையை பார்த்ததும் கட்டி அணைத்து அழுது, காலில் விழுந்து கதறி அழுகிறார். மூன்றாவது ப்ரோமோவில் லாஸ்லியாவின் தந்தை அவரை பார்த்து அடுத்தவங்க என்ன காரி துப்புரதை பார்க்க தான் உள்ள வந்தியா? என மிகவும் கோவமாக லாஸ்லியாவை திட்டுகிறார். பின் எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு வெளியே வா என கூறுகிறார். சேரன் லாஸ்லியாவின் தந்தையை சமாதானம் செய்ய முயற்சித்தும் அது எந்த அளவிற்கு பலன் அளித்தது என்பது தெரியவில்லை இன்றைய நிகழ்ச்சியை பார்த்தல் தான் தெரியவரும். இதற்கு முக்கிய காரணம் லாஸ்லியாவிற்கு, நடிகர் கவின் மேல் உண்டான காதல்தான் என்று கூறப்படுகிறது.
ராக்ஸ் பாட்மிண்டன் அகாடமியின் கூட்டுமுயற்சியால் தேசிய மற்றும் உலக அளவில் ஜொலிக்கும் இளம் வீரர்கள்!
சசி கிரேட்டிவ் கல்லூரியில் சிறந்த கட்டிடக்கலை நிபுணர் மற்றும் வடிவமைப்பாளர்கான விருது
யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் 19வது புதிய மண்டல அலுவலகம் கோவையில் திறப்பு !
மார்ச் 2025-ல் 7,422 கார்களை விற்று மிக அதிக மாத விற்பனை என்ற சாதனையை ஸ்கோடா படைத்துள்ளது
ஈஷாவில் நிறைவுபெற்ற பாதுகாப்பு படைகளுக்கான ஹத யோகா பயிற்சி நிகழ்ச்சி!
16 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு : மாநில அளவிலான கூடைப் பந்து சாம்பியன்ஷிப் போட்டி கோவையில் துவங்கியது