October 5, 2017
tamilsamayam.com
சிறிது காலம் ஓய்ந்து இருந்த அனுஷ்கா, பிரபாஸ் திருமணம் தொடர்பான செய்தி மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.
பாகுபலி வெற்றி இந்திய சினிமாவை மட்டுமின்றி, அந்தப் படத்தில் நடித்த பிரபாஸ், அனுஷ்கா ஜோடி குறித்து பல்வேறு செய்திகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. இவர்கள் இருவரும் திருமணம் செய்ய இருப்பதாக பாகுபலி வெளியானபோது செய்தி வெளியாகி இருந்தது.
இதை மறுத்த இவர்கள் நாங்கள் சிறந்த நண்பர்கள் என்று தெரிவித்து இருந்தனர். சிறிது காலம் இவர்கள் தொடர்பான கிசு கிசு எதுவும் வெளியாகாத நிலையில் மீண்டும் தற்போது வெளியாகியுள்ளது.
இவர்கள் இருவருக்கும் வரும் டிசம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதாகவும், இவர்கள் கமிட் செய்து கொண்ட படங்களை முடித்த பின்னர் திருமணம் செய்து கொள்ள உள்ளனர் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது. ஆனால், இந்த செய்தி உண்மையல்ல என்ற செய்தியும் பரவி மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.