தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவரான சிவகார்திகேயன் இன்று தனது 35வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். எஸ்கே பிறந்தநாள் ஸ்பெஷலாக நெல்சன் இயக்கத்தில் அவர் நடித்து வரும் டாக்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை வெளியாகியது.
இதற்கிடையில், சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது என இன்று காலை அயலான் படக்குழு அறிவித்திருந்தது. அந்தவகையில் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் அயலான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் சிவகார்த்திகேயன் ஏலியனுடன் லாலி பாப் வைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறார்.
சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில்,
எனது புதிய நண்பரை வேறொரு உலகத்திலிருந்து அறிமுகப்படுத்தியதில் மகிழ்ச்சி” என குறிப்பிட்டுள்ளார்
வேற்றுகிரக மனிதர்களை கொண்ட வித்யாசமான கதையம்சத்தில் உருவாகிவரும் அயலான் படத்தில் ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடிக்கிறார். 24AM Studios நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். முழுக்க ஏலியான்களை முன்வைத்து உருவாக்கப்பட்டுள்ள கதை என்பதால், கிராபிக்ஸ் பணிகள் மட்டும் சுமார் 8 மாதம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
கல்வியில் அரசியலை புகுத்த வேண்டாம் – கோவையில் ஜிகே வாசன் பேட்டி
வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) சார்பில் ஆர்ப்பாட்டம்
ராக்ஸ் பாட்மிண்டன் அகாடமியின் கூட்டுமுயற்சியால் தேசிய மற்றும் உலக அளவில் ஜொலிக்கும் இளம் வீரர்கள்!
சசி கிரேட்டிவ் கல்லூரியில் சிறந்த கட்டிடக்கலை நிபுணர் மற்றும் வடிவமைப்பாளர்கான விருது
யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் 19வது புதிய மண்டல அலுவலகம் கோவையில் திறப்பு !
மார்ச் 2025-ல் 7,422 கார்களை விற்று மிக அதிக மாத விற்பனை என்ற சாதனையை ஸ்கோடா படைத்துள்ளது