November 8, 2018
தண்டோரா குழு
அக்ஷராஹாசனின் தனிப்பட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் லீக்கானதால் மும்பை போலீசில் அவர் புகார் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
நடிகை அக்ஷராஹாசன் கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் மற்றும் அமிதாப்பச்சனுடன் இணைந்து சமிதாப் என்ற படத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து அஜித்தின் விவேகம் படத்தில் நடித்திருந்தார். இவர் நடிகர் கமலஹசானின் இளைய மகளாவர். அடுத்தாக அக்ஷராஹாசன் விகரமுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இதற்கிடையில், அக்ஷராஹாசன் உள்ளாடைகள் மட்டுமே அணிந்தபடி கவர்ச்சியான படங்கள் இணையதளத்தில் வெளியாகி இருந்தன. இது சமூக வலைதளங்களிலும் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தனது தனிப்பட்ட புகைப்படங்கள் இன்டர்நெட்டில் வெளியிட்டவரை கண்டுபிடிக்க வேண்டும் என மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார்.
மேலும், இந்த சம்பவம் குறித்து அக்ஷராஹாசன் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் குறிப்பு ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்,
நாடு முழுவதும் மீ டூ விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள இந்தச் சூழ்நிலையிலும், சிலர் அவர்களது அர்ப்ப சுகத்துக்காக இதுபோன்ற செயலில் ஈடுபடுவது வேதனையளிக்கிறது. நான் வேண்டிக் கொள்வது என்னவென்றால், ‘‘நாமும் வாழ கற்றுக் கொள்ள வேண்டும், அடுத்தவர்களை கவுரவமாக வாழ விடவேண்டும். இணையதள உலகம் இது போல் என்னை தொந்தரவு செய்வதை தொடராது என நம்புகிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.