July 22, 2017
தண்டோரா குழு
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘மெர்சல்’. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியிடப்பட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் ஆடி மாதத்தை முன்னிட்டு இப்படத்தின் இசை வெளியீடு குறித்து ஸ்பெஷல் அப்டேட் வரவுள்ளதாக படக்குழுவினர் ஏற்கனவே கூறியிருந்தனர்.
இதனை அடுத்து விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்த படி இப்படத்தின் இசை வெளியீடு குறித்து ஓர் போஸ்டர் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஏ.ஆர்.ரகுமானின் இசையில் உருவாகி வரும் இப்படத்தின் இசை வெளியீடு வரும் ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.