January 18, 2019
தண்டோரா குழு
சந்திரா ஆர்ட்ஸ் சார்பாக இசக்கி துரைதயாரிப்பில்மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் புதிய படத்தை படத்தில் “மக்கள் செல்வன்” விஜய்சேதுபதி நடிக்கின்றார்.
இப்படத்தை பொறம்போக்கு, பேராண்மை படங்களில் இயக்குநர் ஜகனாதனிடம் உதவிய இயக்குனராக பணியாற்றிய வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்குகிறார். இந்த படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைக்கிறார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்கிறார். 150 வருடம் பழமைவாய்ந்த பிரம்மாண்டமான சர்ச் செட் இப்படத்திற்காக வடிவமைக்கப்படவுள்ளது. விஜய்சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகும் படங்களில் இந்த படம் அதிக பட்ஜெட் படமாக இருக்குமாம்.
மேலும், இந்த படத்தில் விஜய்சேதுபதி இசைக்கலைஞராக நடிக்க, அவருடன் இரு ஹீரோயின்கள் நடிக்கவுள்ளனர். தற்போது ஹீரோயின்களின் தேர்வு மும்புரமாக நடைபெற்று வருகிறது. மேலும் இப்படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகர் நடிகையர் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.
சர்வதேச அளவில் நடைபெறும் பிரச்சினையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்கவுள்ளது.