July 26, 2017
tamil.samayam.com
இந்த மூஞ்சிய வச்சிக்கிட்டு ஹீரோவாக நடிக்க வந்துட்டான் என்று என்னை கிண்டல் செய்தார்கள் என்று தனுஷ் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் தனுஷ். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், திரைக்கதை மற்றும் எழுத்தாளர் என்று பல திறமைகளை கொண்டுள்ளார். தற்போது சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் இவர் நடித்த விஐபி2 படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பிசியாக இருக்கிறார். அப்போது பேசிய அவர் கூறுகையில், இந்த மூஞ்சி எல்லாம் ஹீரோவாக நடிக்க வந்துவிட்டது என்று என்னை பலர் கிண்டல் செய்தார்கள். தற்போது இந்த மூஞ்சி தான் கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்றது. அங்கிருந்து அப்படியே ஹாலிவுட்டுக்கும் சென்றுள்ளது என்று கூறியுள்ளார்.
தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர் (The Extraordinary Journey of the Fakir) என்ற ஹாலிவுட் படத்தின் நடிக்கிறேன். என்னுடைய சினிமா வாழ்க்கை கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என்று ரொம்ப அருகையாக சென்றுகொண்டிருக்கிறது. இதற்கு மேல் வேறு என்ன வேண்டும் என்று தனுஷ் கூறியுள்ளார்.
கடவுளின் ஆசியின் காரணமாக நான் இந்த நிலைக்கு உயர்ந்துள்ளேன். எந்த நாடு அல்லது கண்டத்திற்கு சென்றாலும், அங்குள்ள மக்களுக்கு பாலிவுட் படங்கள் பற்றி நன்கு தெரிந்துள்ளது. எல்லாருக்கும், எல்லா படங்களை பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தனுஷ் கூறியுள்ளார்.