September 26, 2017 தண்டோரா குழு
SMULE செல்போன் ஆப்பில் இருந்து இளையராஜா இசையை நீக்க வேண்டும் என இளையராஜாவின் காப்புரிமை ஆலோசகர் பிரதீப் குமார் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ஸ்மூல் என்னும் செல்போன் ஆப் மூலம் பாடல்களை கேட்டு தனியாகவும், ஜோடியாகவும் பாட முடியும். இந்நிலையில், ஸ்மூல் ஆப்பில் இருந்து இளையராஜாவின் பாடலை நீக்க வேண்டும் என அவரது காப்புரிமை ஆலோசகர் பிரதீப் குமார் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
மேலும், அனுமதி பெறமால் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்துவது தவறு எனவே அந்நிறுவனத்தின் டேட்டா பேஸிலிருந்து இளையராஜாவின் பாடல்களை நீக்க வேண்டும் என அந்நிறுவனத்திற்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.
இது குறித்து பிரதீப் குமார் கூறும்போது,
வெளிநாட்டு இசை கலைஞர்களின் படைப்புகளை அனுமதியின்றி யாரும் பயன்படுத்த முடியாது எனவும், இந்தியாவில் பாடல்களை வியாபாரத்திற்காக அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறினார்.இந்த நிலை தொடர்ந்தால் சம்பந்தப்பட்ட செயலிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.