May 4, 2018
தண்டோரா குழு
ஹரே ஹரே மாஹதேவகி படத்தை இயக்கிய சந்தோஷ் இயக்கத்தில் கவுதம் கார்த்திக்,வைபவி சந்தியா,யாஷிகா ஆனந்த் சதிஷ் மற்றும் பலர் நடிப்பில் இன்று வெளியான படம் இருட்டு அறையில் முரட்டு குத்து.
முழுக்க முழுக்க நகைச்சுவை மற்றும் இரட்டை அர்த்த வசனங்களுடன் கூடிய இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.இன்று வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில்,ரசிகர்களுடன் படம் பார்க்க வந்த இப்பட இயக்குனர் சந்தோஷ் மற்றும் தயாரிப்பளார் ஞானவேல்ராஜா கூறும்போது,இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இருட்டு அறையில் முரட்டு குத்து இரண்டாம் பாகம் கண்டிப்பா இருக்கு,அடுத்த வருடம் ரிலீஸ் ஆகும் என கூறியுள்ளனர்.