• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இளைஞர்கள் தான் உண்மையான சூப்பர்ஸ்டார் – விவேக்

April 2, 2017 தண்டோரா குழு

இளைஞர்கள் தான் உண்மையான சூப்பர்ஸ்டார் என நடிகர் விவேக் பேசினார்.

கோவையில் அமைந்துள்ள வி.எல்.பி ஜானாகியம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் மேல்நிலை தேர்வு எழுதிய மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் விவேக் கலந்து கொண்டார்.

விழாவில்,அவர் பேசியதாவது,

தமிழ்நாட்டின் பெருமையை உலகறிய செய்தவர்கள் மாணவர்கள். எந்த ஒரு புதிய முயற்சியும் மூன்று நிலைகளை கடந்தாக வேண்டும். எதிர்ப்பு, ஏளனப்படுத்துதல், ஏற்றுக் கொள்ளுதல் இவை மூன்றும் தான் வெற்றியின் ரகசியம்.

நேதாஜி, ராஜாஜி, காந்தி, போன்ற தலைவர்களுக்கே சிறந்த வழிகாட்டியாக திகழ்ந்தவர் விவேகானந்தர் ஆவார்.

ஆகவே அவரது பொன் மொழிகளை படியுங்கள் நிச்சயம் உங்கள் வாழ்க்கை மாறும்.

தமிழ்நாட்டு மாணவர்கள் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் உலகயே திரும்பி பார்க்க வைத்தார்கள். இன்றைய சூழலில் இளைஞர்கள் தான் உண்மையான சூப்பர்ஸ்டார்ஸ்.

ஆனால், மீண்டும் அப்படியொரு புரட்சியை மாணவர்களால் துவங்க முடியாமல் போனதற்கு காரணம் ஒரு நல்ல தலைமை இல்லை என்பதையே காட்டுகிறது.

தலைமை மட்டும் போதாது நல்ல ஆளுமைத்திறனும் வேண்டும். அப்போது தான் சிறப்பாக செயல்பட முடியும்.

உங்களையும் உங்கள் பெற்றோர்களையும் நேசியுங்கள் வெற்றி உங்கள் வாசலை தட்டும். .

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க