June 12, 2018 தண்டோரா குழு
தனி ஒரு ஆளாக அரசையும் அரசியல்வாதிகளை எதிர்த்து குரல் கொடுத்து வருபவர் டிராபிக் ராமசாமி.இவரது வாழ்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் தான் டிராபிக் ராமசாமி.
அறிமுக இயக்குனர் விக்கி இயக்கத்தில் தளபதி விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்துள்ள டிராபிக் ராமசாமி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைப்பெற்றது.இவ்விழாவில் படத்தில் பணிபுரிந்த கலைஞர்கள்,வைரமுத்து மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் பணிபுரிந்த உதவி இயக்குநர்கள் ஷங்கர்,பொன்ராம்,ராஜேஷ்,சாமி என முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய இயக்குநர் ஷங்கர்,
டிராபிக் ராமசாமி என்னையும் பாதித்த மனிதர்,அவருக்குள் ஒரு ஹீரோயிசம் இருக்கும்.அதைப் பார்த்து நான் மனசுக்குள் கைதட்டியது உண்டு.இவர் கத்தி எடுக்காத இந்தியன் வயசான அந்நியன் அம்பி.இவர் கதையை படமாக்க நானும் ஆசைப்பட்டேன்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இந்த கதையை எடுக்கலாம் என இருந்தேன்.ஆனால்,எஸ்.ஏ.சேகர் என்று அறிவிப்பு வந்ததும் வடபோச்சா என நினைத்தேன்.இருந்தாலும் எனக்கு மகிழ்ச்சி தான்.படம் பார்க்க காத்திருக்கிறேன் என கூறினார்.