• Download mobile app
22 Nov 2024, FridayEdition - 3208
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உலகளவில் மொத்த வசூலில் ரூ.100 கோடியை தாண்டிய பிகில்

October 28, 2019 தண்டோரா குழு

விஜய்-அட்லி கூட்டணியில் மூன்றாவது முறையாக வெளியாகியுள்ள படம் ‘பிகில்’. 180 கோடி ரூபாய் பொருட்செலவில் இந்தப் படத்தை பிரம்மாண்டமாக ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்தது. கடந்த 25ம் தேதி இப்படம் வெளியானது. தமிழக வெளியீட்டு உரிமையை ஸ்கிரீன் சீன் நிறுவனம் சுமார் 83 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இந்தப் படம் வெளியானது.

விமர்சன ரீதியாகக் கலவையாக இருந்தாலும், வசூல் ரீதியாகப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில், தற்போது இப்படம் உலகளவில் மொத்த வசூலில் சுமார் ரூ.100 கோடியைக் கடந்து சாதனை புரிந்துள்ளது. அமெரிக்காவில் இதுவரை 940K டாலர்கள் வசூல் செய்துள்ளது. இன்றைய வசூலின் மூலம் 1 மில்லியன் டாலரைத் தொடும் என்பது உறுதியாகிறது. இங்கிலாந்தில் 2.31 கோடி ரூபாயும், ஆஸ்திரேலியாவில் 1.59 கோடி ரூபாயும் வசூல் செய்துள்ளது. சென்னையில் மட்டும் வெள்ளிக்கிழமை – ரூ.1.79 கோடி, சனிக்கிழமை – ரூ.1.73 கோடி, ஞாயிற்றுக்கிழமை – ரூ.1.74 கோடி என மொத்தமாக இதுவரை ரூ.5.26 கோடி வசூல் செய்துள்ளது.

கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் வசூல் சுமார் ரூ.10 கோடியைத் தாண்டியுள்ளது. தமிழகத்தின் மொத்த வசூல் கடந்த மூன்று நாட்களில் மட்டும் சுமார் 60 கோடி ரூபாயைத் தாண்டும் என தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் எவ்வளவு தொகை என்பது தெரியவரும்.

மேலும் படிக்க