May 22, 2018
தண்டோரா குழு
விவேக் மற்றும் தேவயாணி நடிப்பில் உருவான எழுமீன் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது.இதில் நடிகர் சிம்பு கலந்துகொண்டார்.
அப்போது பேசிய நடிகர் சிம்பு,
“கட் அவுட் பிரச்சினையில் எனது ரசிகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் வேதனை அளிக்கிறது.எனது மிகப்பெரிய பலம் என் ரசிகர்கள்.ஒரு கட் அவுட் பிரச்சினையால் என் ரசிகன் கொல்லப்பட்டிருக்கிறான்.இந்த பிரச்சனைக்காக ஒரு உயிர் போய்விட்டது.இது தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகிவிட்டது. அதனால் எனக்கு யாரும் இனி கட் அவுட் வைக்காதீர்கள்” என கூறியுள்ளார்.