• Download mobile app
20 Apr 2025, SundayEdition - 3357
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஒருவழியாக மனைவியை தேர்வு செய்த ஆர்யா

April 18, 2018 tamilsamayam.com

நடிகை ஆர்யா தனது வருங்கால மனைவியை தேர்வு செய்துவிட்டார்.தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஆர்யாவின் “எங்க வீட்டு மாப்பிள்ளை” நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது.16 பெண்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில்,ஆர்யா தனது துணையை தேர்வு செய்கிறார்.

இது நம் கலாச்சாரத்திற்கு எதிரானது என்று பல்வேறு கண்டனக் குரல்கள் எழுந்தன.இருப்பினும் இந்த நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.தற்போது சூசனா,அகாதா,சீதாலட்சுமி ஆகிய மூன்று பெண்கள் இறுதிச் சுற்றில் உள்ளனர்.

இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் தனது துணையை ஆர்யா தேர்வு செய்கிறார். இதற்கான முன்னோட்டத்தில் மூவரும் மணப்பெண் போன்று அலங்காரம் செய்து வரிசையாக நிற்கின்றனர்.அதில் ஒருவரை அருகில் சென்று கட்டிப் பிடிப்பதோடு முடிகிறது.இருப்பினும் முன்னோட்டத்தில் ஒன்றாகவும்,நிகழ்ச்சியில் வேறொன்றாகவும் இருக்கலாம் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.

மேலும்,இன்று தேர்வாகும் பெண்,ஆர்யாவை திருமணம் செய்தே ஆக வேண்டும் என்றில்லை. தனக்கு விருப்பம் இல்லை என்று கூறி,ஆர்யாவை நிராகரித்தும் செல்லலாம்.

மேலும் படிக்க