• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஒரு குப்பைக் கதை படம் மைனா போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும் – உதயநிதி ஸ்டாலின்

May 16, 2018 தண்டோரா குழு

பாகன்’ படத்தை இயக்கிய அஸ்லாம் தயாரிக்க, புதுமுக இயக்குநர் காளி ரங்கசாமி இயக்கும் படம் ‘ஒரு குப்பைக் கதை’. தமிழ் சினிமாவின் முக்கிய நடன இயக்குநராக வலம் வரும் மாஸ்டர் தினேஷ், இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆகவுள்ளார்.

இந்தபடத்தில் மனிஷா யாதவ் நாயகியாக நடித்துள்ளார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் படத்தை வெளியிடுகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது.


அவ்விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின்,

எனது முதல் மூன்று படங்களுக்கும் தினேஷ் மாஸ்டர் தான் நடனம் சொல்லிக் கொடுத்தார். “தினேஷ் மாஸ்டருக்கும், எனக்கும் ஒரு நல்ல நட்பு இருக்கிறது. இவர் ஏன் ஹீரோவாக நடிக்கிறார் என்று முதலில் யோசித்தேன். பின்னர் படம் பற்றி கேள்விப்பட்ட நான், படத்தை நாமே வெளியிடலாம் என்று முடிவு செய்தேன். ஒரு குப்பைக் கதை படம் மைனா போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும். நல்ல படங்கள் வந்தால் பாராட்டுவதும், சுமாரான படங்களை விமர்சிப்பதும் வழக்கம் தான். அந்த வகையில் இந்த படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வரும் என்று நம்புகிறேன். படம் மே 25-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது” எனக் கூறினார்

மேலும் படிக்க