May 11, 2017
தண்டோரா குழு
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகிவரும் படம் விவேகம். இப்படத்தின் டீசரை அஜித் ரசிகர்கள் இன்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
அதன் படி “விவேகம்” படத்தின் டீஸர் நள்ளிரவு 12.01 மணிக்கு இணையதளங்களில் வெளியிடப்பட்டது. சிவா இயக்கத்தில் பிரமாண்டமாக எடுத்துள்ள இந்த படத்தின் டீஸர் லைக்சில் சாதனை படைத்துள்ளது.
வெளியிடப்பட்ட 50 நிமிடங்களில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்சுகளை பெற்று “கபாலி” படத்தின் டீஸர் சாதனையை முறியடித்துள்ளது. “கபாலி” படத்தின் டீஸர் 1 லட்சம் லைக்சுகளை 1மணி நேரம் 30 நிமிடம் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.