June 30, 2017
tamilsamayam.com
இதுவரை நான் இணைந்து நடித்த நடிகர்களில் கமலுக்கு அடுத்தபடியாக வியந்தது என்றால் அது விஜய் சேதுபதியை பார்த்துதான் என்று நடிகர் மாதவன் கூறியுள்ளார்.
நடிகர் மாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் விக்ரம் வேதா திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. சமீபத்தில் வெளியான டிரெய்லர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தில் நடித்துள்ள நடிகர் மாதவன், உடன் நடித்த விஜய் சேதுபதி குறித்து புகழ்ந்து பேசியுள்ளார்.
நடிகர் மாதவன் உலக நாயகன் கமல்ஹாசனுடன் அன்பே சிவம், மன்மதன் அம்பு ஆகிய படங்களில் சேர்ந்து நடித்துள்ளார். அதே போல் பாலிவுட்டில் அமீர்கான், சித்தார்த் ஆகியோருடனும் சேர்ந்து நடித்துள்ளார். ஆனால் இது வரை தான் சேர்ந்து நடித்த நடிகர்களில் கமலுக்கு அடுத்ததாக விஜய் சேதுபதி தான் தன்னை வியப்பில் ஆழ்த்தியுள்ளார் என்று மாதவன் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் விஜய் சேதுபதியை பாலிவுட்டுக்கு அழைத்து செல்வேன் என்றும் மாதவன் கூறியிருக்கிறார்.