September 19, 2017
tamilsamayam.com
நடிகர் கமலை வைத்து ‘இந்தியன் 2’ படத்தை இயக்கவுள்ளார் இயக்குனர் ஷங்கர்.
ரஜினியின் 2.0 படத்தை அடுத்து நடிகர் கமலை வைத்து “இந்தியன் 2” படத்தை இயக்கவுள்ளார் இயக்குனர் ஷங்கர். “விவேகம்” படத்தை அடுத்து அஜீத், ஷங்கர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்ற செய்தி வெளியானது. ஆனால், தற்போது அஜீத்தை வைத்து ஷங்கர் இயக்கவில்லையாம். நடிகர் கமலை வைத்து “இந்தியன் 2” படத்தை இயக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
இயக்குனர் ஷங்கரும், கமல்ஹாசனும் முதன் முதலாக இணைந்த “இந்தியன்” படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. கடந்த சில வருடங்களாக ஏற்கெனவே வெளியாகி வெற்றிப்பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்களை எடுப்பது டிரெண்டாக உள்ளது.இந்நிலையில் “இந்தியன்” படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க ஷங்கர் திட்டமிட்டிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது “எந்திரன்” இரண்டாம் பாகமாக ‘2.0’ படத்தை இயக்கி வரும் ஷங்கர் அடுத்து ‘இந்தியன்-2’ வை இயக்கவே அதிக வாய்ப்பு இருக்கிறது.