May 24, 2018
தண்டோரா குழு
நடிகர் கமலஹாசன் தன் கையால் கோல்டன் ஸ்டார் விருதை நடிகர் துல்கர் சல்மானுக்கு வழங்கினார்.
ஏசியாநெட்டின் 25வது சினிமா விருது வழங்கும் விழா சில தினங்களுக்கு முன்பு கொச்சியில் நடைபெற்றது.இந்த விழாவில் மலையாள திரையுலக நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டனர். மேலும், இந்த விழாவிற்கு தமிழ் சினிமாவில் இருந்து நடிகர்கள் கமல்,நதியா,தமன்னா,ஆகியோரை நட்புக்காக அழைந்திருந்தனர். இவ்விழாவில் நடிகர் கமல்ஹாசன் தன் கையால் பலருக்கும் விருது வழங்கினார்.
இவ்விழாவில் நடிகர் துல்கர் சல்மான் கடந்த வருடத்திற்கான ஏசியாநெட் கோல்டன் ஸ்டார் விருதை கமல் கையால் பெற்றுக்கொண்டார்.