May 2, 2017
தண்டோரா குழு
“விஸ்வரூபம்-2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் கமல்ஹாசன். கமல்ஹாசன் இயக்கத்தில் கடந்த சில ஆண்டுக்கு முன்பு வெளிவந்த மாபெரும் பெற்றி பெற்ற படம் விஸ்வரூபம்.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தையும் கமல் இயக்கியுள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பே, ‘விஸ்வரூபம்-2’ படத்தின் வேலைகள் முடிந்திருந்த நிலையில், பொருளாதார சிக்கலால் இந்த படம் வெளியாகாமல் இருந்தது.
இந்நிலையில், தற்போது இந்த படத்தை ‘ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்’ 2017ம் ஆண்டு இறுதிக்குள் வெளியிட போவதாக அதிகாரபூர்வ தகவல் அண்மையில் வெளியானது.
இதனை அடுத்து இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை கமல்ஹாசன் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில், “என் நாட்டையும், மக்களையும் அன்போடு நேசிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.