June 4, 2018 தண்டோரா குழு
காலாவைத் தொடர்ந்து விஸ்வரூபம்-2 படத்திற்கும் கர்நாடகாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ரஞ்சித் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் காலா.ஏற்கனவே இப்படத்தின் டீசர்,ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.வரும் ஜூன் 7ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில்,கன்னட மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் ரஜினிகாந்த் பேசியிருப்பதால் காலா திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தடை விதித்துள்ளது.
இதனையடுத்து காலாவைத் தொடர்ந்து கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்திற்கும் கர்நாடகாவில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.காவிரி பிரச்சினையில் கர்நாடகத்துக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக கமல்ஹாசன் படத்துக்கும் அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கர்நாடக திரைப்பட வர்த்தகசபை தலைவர் கோவிந்து கூறுகையில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் படங்களை தவிர மற்ற படங்களை கர்நாடகாவில் திரையிட எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கூறினார்.