• Download mobile app
17 Apr 2025, ThursdayEdition - 3354
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கர்ப்பம் தொடர்பாக செய்தியால் கடுப்பான நஸ்ரியா

June 16, 2017 தண்டோரா குழு

தமிழில் நேரம் படம் மூலம் அறிமுகமானவர் மலையாள நடிகை நஸ்ரியா. அதன் பின் அட்லி இயக்கத்தில் ராஜா ராணி படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துவிட்டார்.

அதன் தமிழில் மீண்டும் நடிப்பார் என எதிர்பார்க்கபட்ட நிலையில் திடீரென மலையாள நடிகர் ஃபகத் பாசிலை திருமணம் செய்து கொண்டு திரையுலகில் இருந்து விலகினார்.

இந்நிலையில் பிரபல ஊடகம் ஒன்று நஸ்ரியா தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும், பகத்பாசில்-நஸ்ரியா தம்பதியினர் தங்களது முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் செய்தி வெளியிட்டது. இந்த செய்தி சமூக வலைத்தளங்ககளில் தீயாய் பரவியது.

இந்நிலையில் தனது கர்ப்பம் குறித்து செய்தி வெளியிட்ட ஊடகத்திற்கு நஸ்ரியா காட்டமான விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், ஒரு செய்தியை வெளியிடும் முன்னர் சம்பந்தப்பட்டவர்களிடம் உறுதி செய்து கொண்டு வெளியிடுங்கள். உங்கள் செய்தியால் எனக்கு பதில் சொல்ல நேரம் இல்லாத அளவிற்கு போன் அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றது. இந்த செய்தி முற்றிலும் தவறானது. ஒருமுறைக்கு இருமுறை செய்தியை உறுதிப்படுத்தி கொண்டு வெளியிடுங்கள் என்று நச்சென்றும் நாகரீகமாகவும் தனது விளக்கத்தை அளித்துள்ளார்.

மேலும் படிக்க