February 15, 2018
தண்டோரா குழு
பிரபல தொலைக்காட்சியில் வெளிவந்த “கனா காணும் காலங்கள்” நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் யுதன் பாலாஜி. அதன்பின் பட்டாளம், காதல் சொல்ல வந்தேன்,வசந்தகுமார் போன்ற சில படங்களில் நடித்த இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ப்ரீத்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இதற்கிடையில், கடந்த சில மாதங்களாகவே கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்துள்ளது. இதனால், இருவரும் பரஸ்பர விவாகரத்து நீதிமன்றத்தை நாடினர். இதன்படி நேற்று காதலர் தினத்தன்று இவர்களுக்கு விவாகரத்து கிடைத்துள்ளது.
“இந்த காதலர் தினத்தில் கடவுள் வித்தியாசமாக பிளானை செயல்படுத்தியுள்ளார்.காலையில் வழக்கம் போல எழுந்தேன், கோர்ட்டிற்கு சென்றேன் விவாகரத்து கிடைத்தது,ஆனாலும் மகிழ்ச்சி” என்று தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் பாலாஜி.