• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காயத்ரிக்கு நான் திரைக்கதை எழுதவில்லை: கமல் ஹாசன்!!

July 13, 2017 tamilsamayam.com

“காயத்திரி ரகுராமுக்கு நான் திரைக்கதை எழுதிக் கொடுத்து இருந்தால், எது என்னுடைய பொறுப்பு. இதையெல்லாம் விட நான் வாழும் சமூகத்தில் மோசமான வார்த்தைகளை பேசிக் கொண்டு இருக்கின்றனர்” என்று நடிகர் கமல் ஹாசன் ஆவேசமாக கூறினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆபாசமாக இருப்பதாகவும், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் மற்றும் தொகுப்பாளர் கமல் ஹாசனை கைது செய்ய வேண்டும் என்று நேற்று இந்து மக்கள் கட்சி போலீசில் புகார் அளித்து இருந்தது. இதையடுத்து அவருக்கு ஆதரவாக தமிழகத்தில் ஆதரவுக் குரல் எழுந்து வருகிறது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கும் நடிகை காயத்ரி ரகுராம் ‘சேரி பிஹேவியர்’ என்று பயன்படுத்திய வார்த்தை தற்போது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. இந்த வார்த்தை தற்போது ஜாதி அடிப்படையில் துவேஷத்தை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமூக வலைதளங்களிலும் இதுகுறித்து பெரிய அளவில் சர்ச்சை எழுந்தது.

இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டி அளித்த கமல்ஹாசன்,

“காயத்ரிக்கு நான் திரைக்கதை எழுதிக்கொடுத்திருந்தால், அது என் பொறுப்பாக ஏற்றுக் கொண்டு நான் மன்னிப்பு கேட்க முடியும். மேலும் அதை எப்படி சென்சார் செய்ய முடியும். நான் வாழ்ந்து கொண்டிருக்கும் சமூகத்தில் அதையும் விட மோசமான வார்த்தைகள் பேசப்பட்டு வருகிறது. ஜாதின்னு பேசறாங்க. அதையெல்லாம் நீக்க முடியவில்லையே” என்றார்.

இதற்கு முன்னதாக என்னை கைது செயதாலும் சட்டம் என்னைக் காப்பாற்றும் என்று கமல் ஹாசன் தெரிவித்து இருந்தார்.

மேலும் படிக்க